இந்த பூவுலகில் நாம் வந்து பிறந்தது நாம் எடுத்த முடிவு அல்ல. அப்படியிருக்க சின்னச் சின்ன விஷயங்களுக்கெல்லாம் மனம் உடைந்துபோவதும், தவறான முடிவெடுத்து தன்னையே மாய்த்துக் கொள்வதும் பைத்தியக்காரத்தனம். ஒருமுறை ரயிலில் பயணிக்கும்போதோ, கோயில்களுக்குச் செல்லும்போதோ அங்கே கண்கள் தெரியாதவர்களும், கால் ஊனமானவர்களும் வியாபாரம் செய்வதைப் பாருங்கள். அவர்கள்கூட வாழ்க்கை நடத்த வழி தேடி, நம்பிக்கையோடு செயல்படுகிறார்கள்.
அப்படி இருக்க, எல்லாவிதத்திலும் சௌகரியமான நம்மால் வாழ முடியாதா என்ன? வாழ நினையுங்கள் கட்டாயம் வழி கிடைக்கும்.
ஆம். வாழ நினைத்தால் வழியா இல்லை இந்த பூமியில்...இன்று இந்த உலகத்தையே இண்டர்நெட், ஃபேஸ்புக், பிளாக் வாயிலாக என்று நம் கையில் வைத்துக் கொண்டிருக்கும் போது கவலை என்ன?
ReplyDelete